விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தை அவரது என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த நிலையில், கடன் பிரச்னையில் சிக்கி சில ஆண்டுகளாகத் திரைக்கு வராமல் இருந்தது.