விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதுவரை 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.