இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ஆசை மனைவிக்கு காதலர் தின வாழ்த்து கூறி பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. தாம் எழுதிய தீமா தீமா பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து உதட்டசைவிடும் வீடியோவை பகிர்ந்து, பக்கம் பக்கமாக தம் அன்பு மனைவிக்கு காதலர் தின வாழ்த்துகளை விக்னேஷ் தெரிவித்துள்ளார்.