அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை குறிப்பிட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து பெண்களுக்கும் விஜய், தாமே கைப்பட கடிதம் எழுதியுள்ளார். யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? என ஆதங்கப்பட்ட விஜய், ஆளும் ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்து தான் கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எல்லா சூழல்களிலும் அண்ணனாக, பாதுகாப்பு அரணாக இருப்பேன் என உறுதியளித்ததோடு, பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் என சூளுரைத்தார்.