விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பொட்டல முட்டாயே வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ள நிலையில், நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.