விஜய் சேதுபதி நடித்துள்ள "தலைவனின் தலைவி" திரைப்படத்தின் முதல் பாடலான "பொட்டல முட்டாயே" நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. விஜய் சேதுபதியும், இயக்குநர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இது என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.