விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆறுமுக குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றியுள்ளார். அவரோடு இணைந்து அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபுவும், கதாநாயகியாக ருக்மணியும் நடித்துள்ளனர்.