மாஸாக வெளியான விடுதலை 2இரண்டாம் பாகத்தில விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களோடு மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் இணைந்து நடிச்சிருக்காங்க.ஏற்கனவே படக்குழு முதல் பாகத்தின் இறுதியில இரண்டாம் பாகத்தில் வரும் சில காட்சிகள் இணைக்கப்பட்டிருப்பதா தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் விதமா சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரில் வரும் காட்சிகளும் அதில் வரும் வசனங்களும் அமைந்திருந்ததுனே சொல்லலாம்.இந்த நிலையில படம் இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏ சான்றிதழுடன் வெளியான நிலையில படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்கள்ல பாராட்டியும், பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை கொடுத்துட்டும் வந்துட்ருக்காங்க.என் படம் நாட்டை பெருமைப்படுத்தும்தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி படத்தை இயக்கி புகழ்பெற்ற இவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில், ஜவான் என தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாரு.இந்த படங்களை தொடர்ந்து தெறி படத்தை பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் தயாரிச்சிருக்காரு இயக்குநர் அட்லீ. இந்த படத்தில கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க.இந்த நிலையில சமீபத்துல நடந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில பேசிய அட்லீ, தான் தயாரிக்கும் அடுத்த படம் பத்தியும், அதுல விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்துல நடிக்க இருப்பதாகவும் அப்டேட் கொடுத்திருந்தாரு.. இந்நிலையில மற்றொரு அப்டேட்டா தற்சமயம் தன்னுடைய அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டை முடித்துவிட்டதாகவும், ரொம்ப சீக்கிரமே கடவுளின் ஆசீர்வாதத்தோட ஒரு பெரிய அறிவிப்பு வரும்னும், இந்தப்படம் நாட்டை பெருமைப்படுத்தும்னு தான் நினைப்பதாகவும் தெரிவிச்சிருக்காரு..இத தொடர்ந்து பாகுபலி, கே.ஜி.எஃப். மாதிரி பிரமாண்டமான படமா அட்லீயின் அடுத்த படம் இருக்குமோனு ரசிகர்கள் மத்தியில இப்போவே எக்கச்சக்க எதிர்பார்ப்பு துவங்கியிருக்கு..பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் ஏகேநடிகர் அஜித் விடாமுயற்சி படத்துல நடித்து முடித்துள்ள நிலையில, குட் பேட் அக்லீ படத்துல நடிச்சி வந்துட்ருக்காரு.அந்த இரண்டு படங்களும் இறுதிக்கட்ட பணிகள்ல இருக்கும் நிலையில, சமீபத்தில விடாமுயற்சி பட ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாச்சு. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில, அடுத்ததா அஜித் யாருடன் கூட்டணி வைக்க போறாரு என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில அதிகரிச்சிருக்கு. இந்த நிலையில இயக்குநர் வெங்கட் பிரபு அஜித்தை மீண்டும் இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக சூப்பர் தகவல் வெளியாயிருக்கு. இதற்கு முன்பு மங்காத்தா என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணையுமா என ரசிகர்கள் செம்ம வெயிட்டிங்ல இருக்காங்க..சம்பளத்தை உயர்த்திய SK தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில கடந்த மாதம் வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில சினிமாவில் அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறாரு சிவகார்த்திகேயன். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக சுதா கொங்காரா படத்தில் நடிக்க இருக்காரு.இதுவரை ஒரு படத்துக்கு சுமார் 35 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த சிவகார்த்திகேயன் அமரன் வெற்றிக்குப் பிறகு தன்னோட சம்பளத்த உயர்த்திருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. அதன்படி 70-லிருந்து 75 கோடி ரூபாய் வரை அவரது சம்பளத்தை அதிகரிச்சிருப்பதா தகவல் வெளியாகியுள்ளது.என் கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வந்துட்ருக்கு. சமீபகாலமாக ராஷ்மிகாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வரும் நிலையில தனக்கு கணவராக வருபவரோட தகுதிகள் குறித்து ராஷ்மிகா பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் வைரலாகிட்ருக்கு.அதுல 'ஒரு உறவில் அன்பு, அக்கறை, நல்ல இதயம், வெளிப்படைத்தன்மை, உண்மை போன்றவை இருப்பது அவசியம். இது என்கிட்ட இயல்பாகவே இருக்கு. என்னை போன்ற ஒத்த குணங்களை கொண்ட ஒருவர்தான் கணவராக வரணும்னு விரும்புறேன்.என்னுடைய ஏற்றத்தாழ்வுகள் அனைத்துலயும் அவர் துணையாக நிக்கணும். நேர்மையாகவும், கவனத்துடனும், பொறுப்புடனும் இருக்கணும்னு பல விஷயங்கள அவர் பேசியிருக்காரு..இயக்குநர் நித்திலனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. ஒரு அப்பாவிற்கும், மகளுக்கான பிணைப்பை ஆழமா எடுத்து இந்த சமூகத்திற்கு மகாராஜா படம் காட்டியது ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்ப பெற்றுச்சு..சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் உலகளவில் ரூ.180 கோடிக்கும் மேல வசூலை குவிச்சிருந்தது. அண்மையில் படம் இந்தியாவை தாண்டி சீனாவில் வெளியாகி வெற்றி நடை போட்டு வந்துட்ருக்கு. மேலும் ஜப்பானிலும் படத்தை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருது.. இந்த நிலையில இயக்குநர் நிதிலன் சாமிநாதனுக்கு தயாரிப்பு நிறுவனம் சுமார் ரூ.80 லட்சம் மதிப்பு கொண்ட BMW காரை பரிசாக கொடுத்திருக்கு. இந்த கார் பரிசை தயாரிப்பு நிறுவனம் சார்பில் மகாராஜாவின் கதாநாயகன் விஜய்சேதுபதியே அவரிடம் கொடுத்திருக்காரு.ஸ்ரீதேவியை கைது செய்ய சொர்க்கத்துக்கு போவீங்களா..? புஷ்பா 2 பட சிறப்பு காட்சியின்போது படத்தை பார்க்க அல்லு அர்ஜூன் திடீர் எண்ட்ரி கொடுத்ததால் ஏற்பட்ட நெரிசல்ல சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில, அல்லூ அர்ஜூன் கைதுசெய்யப்பட்டு இடைக்கால ஜாமீன்ல வெளியில வந்தாரு.இந்த நிலையில அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து தெலுங்கானா போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கு. இந்த பரபரப்பான சூழல்ல அல்லு அர்ஜூனுக்கு ஆதரவா பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவு ஒன்று வெளியிட்ருக்காரு.அதுல, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை ஒவ்வொரு நட்சத்திரமும் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஒரு திரைப்பட நட்சத்திரமாக இருந்தாலும் சரி ,ஒரு அரசியல் நட்சத்திரமாக இருந்தாலும் சரி, அவர்கள் மிகவும் பிரபலமாக இருப்பது குற்றமா??? எனது 'க்ஷண க்ஷணம்' படத்தின் படப்பிடிப்பில் ஸ்ரீதேவியை பார்க்க வந்த லட்சக்கணக்கான கூட்டத்தில் 3 பேர் பலியாகினர். அதற்காக இப்பொழுது ஸ்ரீதேவியை கைது செய்ய தெலுங்கானா போலீஸ் சொர்க்கத்துக்கு செல்லுமா???' என குறிப்பிட்டிருப்பது வைரலாகிட்ருக்கு.