news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
tv

Also Watch

tv

Read this

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vijay sethupathi

ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகும் புதிய படம்? 

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக உருவாகும் திரைப்படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் டிரெய்லர் :

இயக்குநர் சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள நூறு சாமி திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

'கட்டா குஸ்தி-2' சம்பவக்காரி பாடலின் புரோமோ : 

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் கட்டா குஸ்தி-2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சம்பவக்காரி பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. முழு பாடலும் இன்றும் மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. செல்ல அய்யாவு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கரன் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம் :

பைசன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரம் அடுத்ததாக கரன் அரவிந்த் குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க தயாராகி வருகிறார். திரைப்படத்திற்கான promo shoot பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. கரன் அரவிந்த் குமார், சூர்யாவின் கருத்து படத்தில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் "சிங் கீதம்" திரைப்படம் :

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள "சிங் கீதம்" திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் நாக் அஸ்வின் தயாரிக்கும் இந்த படம் வரும் 11-ம் தேதி வெளியிடவுள்ளதாக டீசரில் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில், முன்னணி நடிகர்களான அயான், அஹில்யா, ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Related Link
முதன்முறையாக அந்த ரோலில் நடிக்கும் சாய் பல்லவி

முதன்முறையாக அந்த ரோலில் நடிக்கும் சாய் பல்லவி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
3 hrs 9 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved