விடுதலை இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணிகளை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளார். விடுதலை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கி வரும் நிலையில், விஜய் சேதுபதியின் கேரக்டருக்கான டப்பிங் பணிகளை ஆயுத பூஜையை முன்னிட்டு தொடங்கியுள்ளார்.