மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தவெக தலைவர் விஜய் பதிலடி,பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே வருத்தமா ,அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே ,முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் போற்றுகிறது,குழந்தை திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால் பெரியாரை போற்றுகிறோம்,சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் பெரியாரைப் போற்றுகிறோம்,இன்று எல்லோரும் கேட்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை 100 ஆண்டுகளுக்கு முன்னரே கேட்டவர்,சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் பெரியார்.