விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் அவைத்தலைவராக செஞ்சி ராமசந்திரன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. MGR உடன் பண்ருட்டி ராமசந்திரன் இருந்தது போல், விஜய்யுடன் தற்போது அதிமுக அமைப்பு செயலாளராக உள்ள செஞ்சி ராமசந்திரனை கொண்டு வர முயற்சி நடைபெறுவதாகவும், இது தொடர்பாக விஜய் தரப்பிலிருந்து செஞ்சி ராமச்சந்திரனை அணுகி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 50 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவரான செஞ்சி ராமச்சந்திரன், தவெக மாநாட்டில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.\