தவெக தலைவர் விஜய்யை வெறும் அட்டை என்றும், கண்காட்சி செட்களுடன் ஒப்பிட்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் செய்தார். திமுகவின் அறிவு திருவிழா கருத்தரங்கில் கலந்துகொண்ட பேச்சாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பேசிய அவர், சிலர் அடித்தளமே இல்லாமல் அரசியலுக்குள் நுழைவதாகவும், திமுக தியாகத்தாலும் போராட்டத்தாலும் உருவான கட்சி என்றும் தெரிவித்தார். மேலும், கொள்கையற்ற ஒரு கூட்டமும், பாசிச கட்சியும் தமிழகத்தை குறி வைப்பதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் இனி, திமுக இளைஞரணி சார்பில் அறிவித்திருவிழா நடத்தப்படும் என்றும் திமுக நடத்துவது அறிவு திருவிழா, ஆனால் அதிமுக அடிமை திருவிழா என்று நடத்தும் என்றும் விமர்சித்தார். இதையும் பாருங்கள் - விஜய் வெறும் அட்டை தட்டினால் உதிர்ந்து விடும் "செட்" துணை முதல்வர் விமர்சனம் | Uthayanithi Stalin