திரைப்படத்தை போலவே தவெக மாநாட்டிலும் விஜய் ஒன் மேன் ஷோவே காட்டியுள்ளதாக பாஜக பிரமுகரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படப்பிடிப்பு தளங்களில் எப்போதும் அமைதியாக இருக்கும் விஜய், மாநாட்டில் பேசிய வேகத்தைப் பார்த்து வியப்பாக இருந்ததாக கூறினார்.