தவெக தலைவர் விஜய்-ன் கரூர் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர், வேலுசாமிபுரத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், மண்டபம் கிடைக்காததால் விஜய் கரூர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களை வழக்கம் போல் பனையூர் அழைத்து வர முடிவு செய்திருப்பதாகவுப் சொல்லப்படுகிறது.பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கல்:இந்நிலையில், கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்த தலா 2 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், அந்த நிவாரணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.