சமூக நீதி பார்வையோடு விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருப்பது நம்பிக்கை தருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னை, ஓட்டேரியில் ரெட்டமலை சீனிவாசனின் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் அரசியல் என்பது சமூக நீதி மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்குமானது என்றார்.