தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் திரைப்பட்தின் டீசர் டிராக் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனுரி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த டீசருக்கு தமிழில் சூர்யாவும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும், இந்தியில் ரன்பீர் கபூரும் குரல் கொடுத்துள்ளனர். இந்த படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.