டிராகன் திரைப்படத்தின் "ஏண்டி விட்டு போன" வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் வாரத்தில் உலக அளவில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'டிராகன் திரைப்படத்தில் கொசேஷா வரிகளில் சிலம்பரசன் பாடியுள்ள 'ஏண்டிவிட்டு போன' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.