ஜார்க்கண்ட் மாநிலம் பஹரகோரா அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் கார் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஞ்சியில் நடைபெற்ற பாஜக பொது கூட்டத்தில் பங்கேற்க சிவராஜ் சிங் சவுகான் காரில் சென்று கொண்டிருந்தார். பஹரகோரா பகுதியில் கனமழை பெய்ததால் சாலை முழுவதும் வெள்ள நீராக காட்சியளித்தது. அப்போது அந்த வழியாக சென்ற மத்திய அமைச்சரின் கார், சேறும் சகதியுமான பள்ளத்தில் சிக்கியது. இதனையடுத்து பாதுகாவலர்கள் அவரை வேறு காரில் அழைத்துச் சென்றனர்.