சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரியான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேரலையில் நடந்த குண்டு வீச்சு தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. செய்தி வாசிப்பாளர் நேரலையில் செய்தி வாசித்து கொண்டிருந்த போது பின் புறம் உள்ள கட்டடத்தின் மீது இஸ்ரேல் வீசிய குண்டு வெடித்து சிதறியது. இதனால் செய்தி வாசிப்பாளர் எழுந்து அலறியடித்து ஓடினார்.