நடிகர் அஜித்குமார் நடித்து இன்று வெளியான விடா முயற்சி திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வருகை தந்த ஏராளமான ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பட்டாசு கையில் வைத்தப்படி வெடித்த ரசிகர் ஒருவரை பார்த்த போலீஸார், அவர்களிடம் சென்று இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினர்.