வேலூருக்கு சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். புத்தகங்களை வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்ற கட்சியினருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.