முகமூடி அணிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல். வீட்டில் இருந்த தாய், மகளை சரமாரியா கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம். கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வந்த போலீஸ். ஒன்றரை மாதத்திற்கு பின் சிக்கிய மருமகளை கஸ்டடியில் எடுத்த போலீஸ். மாமியாரை கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்த கும்பல்2025ஆம் ஆண்டு. நவம்பர் 22ம் தேதி. முகமூடி அணிஞ்சிக்கிட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்ச ஒரு கும்பல், வீட்ல இருந்த மூதாட்டி சாவித்திரி தேவி மற்றும் அவங்களோட மகள் பிராஞ்சலிய(ஃப்ராஞ்சலி) சரமாரியா கத்தியால குத்திருக்காங்க. சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த இரண்டு பேரும் ரத்த வெள்ளத்துல உயிருக்கு போராடிட்டு இருந்தாங்க. இதபாத்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க அந்த ரெண்டு பேரையும் மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. அங்க சாவித்திரி தேவி உயிரிழந்துட்டாங்க. மகள் பிராஞ்சலி தீவிர சிகிச்சை பிரிவுல அனுமதிக்கப்பட்டிருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் யார் இந்த கொலைய செஞ்சது? எதுக்காக இந்த கொலை நடந்ததுன்னு அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட விசாரிச்சுருக்காங்க. அதுல போலீஸ்க்கு எந்த ஒரு துப்பும் கிடைக்கல. சாவித்திரி தேவி வசிச்சுட்டு இருந்த கிராமத்துல பெரியளவுக்கு சிசிடிவி இல்ல.உண்மைகளை கொட்டித் தீர்த்த மருமகள் சோனி தேவிஇதனால கொலையாளிகள பிடிக்க முடியாம போலீஸ் திணறிட்டு இருந்துருக்காங்க. அதுக்கடுத்து சாவித்திரி தேவியோட சொந்தக்காரங்க, அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க செல்போன ஆய்வு செஞ்சுருக்காங்க போலீஸ். அப்ப மருமகள் சோனி குமாரி அடிக்கடி லக்கி ராஜ்-ங்குற நபருக்கு ஃபோன் பண்ணிருந்தத கண்டுபிடிச்சுருக்காங்க. அதே மாதிரி அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்த சோனி குமாரி அனுப்பி வச்சுருந்ததும் போலீஸ்க்கு தெரியவந்துக்கு. இதனால சோனி குமாரி கிட்ட விசாரணை பண்ணிருக்காங்க போலீஸ். எதுக்கு லக்கி ராஜ்க்கு 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி வச்சுருக்கிங்க, இந்த பணம் யாருடையதுன்னு கேள்வி கேட்ருக்காங்க. அப்ப சோனி, திருதிருன்னு முழிச்சுருக்காங்க. இதனால அவங்கள கஸ்டடியில எடுத்த போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணையில இறங்குனாங்க. அதுல தான் பல பகீர் தகவல்கள் வெளியாகிருக்கு.மகனின் சம்பளத்தை தரமறுத்த தாய்பீகார், நவாடா பகுதியில உள்ள ராஜேந்திர நகரச் சேந்தவங்க சாவித்திரி தேவி. சில வருஷங்களுக்கு முன்னாடி இவங்களோட மகனுக்கு சோனி தேவி-ங்குற பெண் கூட கல்யாணம் ஆகிருக்கு. கல்யாணமான நாட்கள்ல இருந்தே சாவித்திரி தேவி தன்னோட மருமகள ரொம்ப சித்ரவதை பண்ணிருக்காங்க. மகனோட சம்பள பணத்துல பாதி காச, அவங்களே எடுத்து செலவுக்கு வச்சுப்பாங்களாம். மருமகள் சோனி தேவிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டாங்களாம். மாமியாரோட இந்த செயல் மருமகள் சோனி தேவிக்கு சுத்தமா பிடிக்கல. அதுக்கடுத்து இப்ப குடியிருக்குற வீட்ட தன்னோட கணவர் பெயருக்கு மாத்தி தரச் சொல்லி மாமியார் சாவித்திரி தேவி கிட்ட கேட்ருக்காங்க சோனி தேவி. அதுக்கு மாமியார், அவன் பெயர்ல வீட்ட எழுதிச் வச்சு, நீ சொகுசா வாழலான்னு ஆசைப்படுறியான்னு திட்டிருக்காங்க. அந்த வீட்டால குடும்பத்துக்குள்ள அடிக்கடி பிரச்னையும் ஏற்பட்டிருக்கு. இதுக்கிடையில சாவித்திரி தேவி வேறொரு நபருக்கு அந்த வீட்ட விற்க முயற்சி பண்ணிருக்காங்க. சோனி தேவி, லக்கி ராஜ் உள்ளிட்ட நபர்கள் கைதுமாமியாரோட இந்த செயல பாத்து கடும் கோபமான சோனி தேவி, சாவித்திரி தேவிய கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க. அதுக்காக தன்னோட உறவுக்கார இளைஞர் லக்கி ராஜ்க்கு 50 ஆயிரம் ரூபாய கூலியா கொடுத்துருக்காங்க. சம்பவத்தன்னைக்கு சாவித்திரி தேவியும் அவங்களோட மகளும் வீட்ல இருந்துருக்காங்க. அப்ப லக்கி ராஜூம் அவரோட நண்பர்களுகும் அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சு மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்து ரெண்டு பேரையும் சரமாரியா குத்திருக்காங்க. இதுல சாவித்திரி தேவி சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாங்க. மகள் ஹாஸ்பிட்டல்ல தீவிர சிகிச்சை பிரிவுல இருக்காங்க. இந்த சம்பவத்த கேட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் மருமகளோட செல்போன ஆய்வு பண்ணி எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்டு சோனி தேவி, லக்கி ராஜ் உள்ளிட்ட நபர்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்க.இதையும் பாருங்கள் - LIC தீ விபத்தில் பகீர் TWIST