ஸ்ரீரங்கம் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட தலைவெட்டி சந்துருவின் கொலைக்கு பழிக்குப்பழியாக, மற்றொரு பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.கொலை நடந்த மறுநாளே 5 பேரையும் போலீசார் அலேக்காக அள்ளிய நிலையில் பழிக்குப்பழியாக மனித தலை உருள்வது தொடர்ந்து கொண்டே இருப்பதால் திருச்சி மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.