இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் 43 லட்சம் என்ற அளவுக்கு இருசக்கர வாகனங்களும், கார்களும் எஸ்யுவிகளும் விற்கப்பட்டதாக FADA எனப்படும் வாகன விற்பனையாளர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் இந்த மாதம் 13 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த அளவுக்கு வாகன விற்பனை நடந்துள்ளது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 38 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டன. இந்த 12 சதவிகித வளர்ச்சியில் இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை பெரிய பங்கு அளித்துள்ளதாகவும், ஊரகப் பகுதிகளில் அவற்றுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதாகவும் FADA தெரிவித்துள்ளது.