பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் இணைந்துள்ளார். பான் இந்தியா அளவில் உருவாக உள்ள இந்த படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க, நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே விஜய் சேதுபதியின் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்த நிலையில், நடிகர் துனியா விஜய் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. துனியா விஜய், பாலையாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.