மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டை பற்றிய ஆழ்ந்த புரிதலுடன் விளங்கிய யெச்சூரி, இந்திய சித்தாந்தத்தின் பாதுகாவலராக இருந்தவர் என கூறியுள்ளார். யெச்சூரியின் குடும்பத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கு ராகுல் ஆறுதல் தெரிவித்துள்ளார். இடதுசாரிகளின் முக்கிய குரலாக யெச்சூரி என்றும் நினைவுகூரப்படுவார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். யெச்சூரியின் மறைவு, தேசிய அரசியலுக்கு இழப்பு என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். மதவாத அரசியலுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்தவர் சீதாராம் யெச்சூரி என ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டபல்வேறு தலைவர்களும் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.