நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4ஆவது திருமணம் நடக்கவிருப்பதாக வெளியான தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. கடற்கரையில் தனது முன்னாள் காதலன் ராபர்ட் மாஸ்டருடன் எடுத்த ROMANCE புகைப்படத்தை வனிதாவே பகிர்ந்திருக்கும் நிலையில், மீண்டும், மீண்டுமா...என ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்..என்னதான் பாரம்பரியமாக சினிமா குடும்ப பின்னணியை கொண்டவராக இருந்தாலும், நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமானது என்னவோ அவர் திரு வாயால் தான்...சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா விஜயகுமார் வாயை திறந்தாலே அது சோஷியல் மீடியா கண்டெண்ட் தான்...! இந்நிலையில், வாயை திறக்காமலேயே இப்போது வைரலாகியிருக்கிறார்.வனிதா விஜயகுமார், சீரியலில் நடித்த ஆகாஷ் என்பவரை, கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு விஜய ஹரி மற்றும் ஜோவிதா என்கிற 2 பிள்ளைகள் உள்ளன. ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 2007 ஆம் ஆண்டு அவரை விட்டு பிரிந்த வனிதா, குழந்தை ஜோவிதாவை மட்டும் தன்னுடன் அழைத்து சென்று விட்டார். முதல் கணவருடனான உறவை முறித்துக்கொண்ட அடுத்த சில மாதங்களிலேயே ஆனந்த் ஜெயராமன் என்ற நபரை 2வதாக திருமணம் செய்துகொண்டார் வனிதா. இவர் மூலம் ஜெயனித்தா என்கிற மகள் பிறந்தார். பிறகு, 2012ம் ஆண்டு ஆனந்த் ஜெயராஜனுடான வாழ்க்கையும் வெறுத்து போன நிலையில், அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.அச்சமயத்தில் தான், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தில் வனிதா நடித்தார். இப்படத்தின் ஹீரோவாக நடித்தவர் ராபர்ட் மாஸ்டர்... படப்பிடிப்பின் போது இருவருக்குமிடையே காதல் தீ பற்றியதாக தகவல்கள் காட்டுத்தீயாய் பரவின. வனிதாவின் பெயரை ராபர்ட் பச்சை குத்தியதாகவும் செய்தி வெளியாகி வதந்திக்கு மேலும் வலு சேர்த்தது. ஆனால் வழக்கம் போல இதுவும் ப்ரொமோஷன் யுக்தி என பூசி மொழுகப்பட்டது. இருவரும் நடித்த படமே ப்ளாப் ஆனது என்றால், இருவரும் இணைந்து வாழ்ந்தால் என்ன ஆகும் என நினைத்து காதலுக்கு முட்டுக்கட்டையை போட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகுதான், பீட்டர் பால் என்பவருடன் பழகி, அவரை காதலித்து, 2020ல் திருமணமும் செய்தார்.. பீட்டர் பாலுடன் வனிதா முத்தமிட்டு வாழ்க்கையை தொடங்கிய போட்டோக்களும் இணையத்தில் படு வைரலாகின. அடுத்தடுத்து அவுட்டிங் சென்று போட்டோக்களை வெளியிட்டு தாங்கள் அன்னோன்யமாக இருப்பதாக தம்பட்டம் அடித்து வந்த நிலையில், பீட்டர் பாலின் முதல் மனைவி பஞ்சாயத்தை கூட்ட, இருவரும் மூன்றே மாதத்தில் பிரியவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.ஒன்றல்ல இரண்டல்ல மூன்று காதலும், மண வாழ்க்கையும் சரிவராத நிலையில், சொந்தமாக யூடியூப் சேனல், சினிமா படங்கள், நிகழ்ச்சிகள் என தன்னை தானே பிஸி ஆக்கிக்கொண்டு அதில் கவனம் செலுத்த தொடங்கினார் வனிதா... இந்த சூழலில் தான் வனிதாவுக்கு 4வது திருமணம் நடைபெற உள்ளதாக போஸ்டர் ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.கடற்கரையில் பிகினி உடையில் தோன்றும் வனிதா, தனது மூன்றாவது கணவனுக்கு முந்தைய காதலனான ராபர்ட் மாஸ்டருக்கு புரபோஸ் செய்துள்ளார். அதில் சேவ் தி டேட் என அக்டோபர் 5-ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மைத்தண்மை தெரியவில்லை. ஒருவேளை முன்பு நடந்ததை போல இதுவும் படத்துக்கான புரோமோஷனாக தான் இருக்கும் என இணைய வாசிகள் தெரிவிக்கின்றனர்.இப்படித்தான் ஒருமுறை பவர் ஸ்டார் சீனிவாசனுடன், வனிதா, மாலையும் கழுத்துமாக நின்ற போட்டோ மிகப்பெரிய அளவில் இணையத்தில் பரவியது.. வனிதா மீதான நம்பிக்கை இழந்த ரசிகர்கள், பவர் ஸ்டார் சீனிவாசனை அவர் திருமணம் செய்து கொண்டாரோ என சந்தேகத்தை கிளப்பினர். கடைசியில் அது பிக்கப் ட்ராப் என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ என வனிதா விளக்கமளித்தார்.ஆனால் சமீபத்தில், வனிதா விஜயகுமாரிடம் அடுத்த திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பதிலளித்ததும் சிந்திக்க வைக்கிறது. வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி போராடும் நடிகை வனிதா பீனிக்ஸ் பறவையா? அல்ல சீசன் பறவையா? என இணையவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.