உத்தர பிரதேசத்தில், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும், வந்தே மாதரம் பாடல் பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று, முதலமைச்சர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கோரக்பூரில் நடந்த ஒற்றுமை பயண விழாவில் ஏராளமானோர் இணைந்து வந்தே மாதரம் பாடலை பாடினர். அந்த நிகழ்வில் பேசிய ஆதித்யநாத், நாட்டை பெருமைப்படுத்தி புனிதப்படுத்தும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார். வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆவதை ஒட்டி டெல்லியில் பிரதமர் மோடி சிறப்பு நிகழ்வில் பங்கேற்றார்.அதன் அடிப்படையில் உ.பி. பள்ளிகளில் வந்தே பாரத்தை கட்டாயமாக்கும் அறிவிப்பை ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார்.