தமிழகத்தில் 2026-இல் அதிமுக ஆட்சி அமையும் என்றும் பிப்ரவரிக்குள் அனைவரும் ஒன்றிணைவது உறுதி என்றும் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அவரது உருவசிலைக்கு வைத்திலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பல முறை வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.