உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நவராத்திரியை முன்னிட்டு பல்ராம்பூரில் உள்ள மா பாதேஸ்வரி தேவி கோவிலில் தரிசனம் செய்தார். கருவறைக்குள் சென்று அம்மனுக்கு ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்த அவர், பின்னர் வெளியே வந்து கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கினார். தொடர்ந்து கோவிலில் உள்ள கோசாலைக்கு சென்ற யோகி ஆதித்யநாத், பசுக்களுக்கு உணவூட்டி மகிழ்ந்தார்.