அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்மொழிந்த காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால், அந்த அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்படும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். எந்த விலை கொடுத்தாவது போர் நிறுத்ததிற்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு ஈடாக இரண்டு கட்ட பிணைக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்ததை ஸ்டீவ் விட்காஃப் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.