அதிகாரத்தை பயன்படுத்தி இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே கலவரத்தை தூண்டுவதாக பா.ஜ.க. மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் ஏற்பட்ட கலவரம், துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, பா.ஜ.க. மதக் கலவரத்தை தூண்டுகிறது எனவும், தேசிய ஒற்றுமைக்கு எதிரான பா.ஜ.க.வின் செயலில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், மதச்சார்பான மற்றும் அவசரமான நடவடிக்கையால் பலியான உயிர்களுக்கு, பா.ஜ.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி கூறினார்.