சென்னை விம்கோ நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் ஆசையாக மனைவிக்கு சுடசுட பிரியாணியும் அவருக்கு மிகவும் பிடித்த சாக்லேட் கேக்கும் காலடிப்பட்டு பகுதியில் அமைந்துள்ள சைனீஸ் என்ற தனியார் உணவகத்தில் ஆர்டர் செய்துள்ளார்.மனைவியும் வீடு தேடி வந்த zomato ஆர்டரை வாங்கி கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து ஆர்டர் செய்த உணவை சாப்பிட சென்ற மனைவி பிரியாணியை உண்ணும் பொழுது பிரியாணி சரியாக வேகாமல் அரைவேக்காட்டில் இருந்துள்ளது. சரி பிரியாணிதான் சரி இல்லை.. நமக்கு பிடித்த சாக்லேட் கேக்கையாவது சாப்பிடலாம் என்று திறந்து பார்க்கும் போது அதில் பூஞ்சை பிடித்ததை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.உடனே கணவருக்கு தகவல் தெரிவிக்க இது தொடர்பாக சதீஷ் உணவகத்திற்கு சென்று கேட்ட பொழுது அங்கிருந்த ஊழியர்கள் அசால்டாக பதில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.