அமெரிக்காவையும், மெக்சிகோவையும் பிரிக்கும் எல்லை பகுதியான டிஜுவானா அருகே அமெரிக்க கடற்படையினர் முள்வேலியை அமைத்தனர். சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதாகவும், எல்லையில், 10,000 தேசிய காவல்படை வீரர்களை நிறுத்துவதாகவும் மெக்சிகோ உறுதி அளித்ததையடுத்து வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், எல்லையில் உள்ள இரும்பு தடுப்பு அருகே முள்வேலி அமைக்கப்பட்டது