உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் சம்மதிக்கவில்லை என்றால் , மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். அலாஸ்காவில் நாளை நடைபெறும் சந்திப்பில் ரஷிய அதிபர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச உள்ளதாக கூறியுள்ள டிரம்ப், முதல் 2 நிமிடங்களிலேயே ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா? என்பது தனக்கு தெரிந்துவிடும் என்றார். முதல் பேச்சுவார்த்தை சரியாக நடந்தால், இரண்டாவது பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவோம் என்றும் உடனடியாக அதை செய்ய விரும்புவதாகவும் கூறினார். புதின் மற்றும் ஜெலன்ஸ்கி பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்திற்கான சாத்தியம் பற்றி பேசிய டிரம்ப் இருவரும் விரும்பினால், தாமும் கூட்டத்தில் பங்கேற்பேன் என்றார்.