சட்டவிரோதமாக குடியேறியவர்களை, கைவிலங்கு பூட்டி நாடு கடத்துவது அமெரிக்காவின் வழக்கம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியர்களின் கைகளில் விலங்கு பூட்டியும், கால்களில் சங்கிலி போட்டும் அழைத்து வந்ததாக கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.