ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கான நேரம் முடிவடைந்து விட்டதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்துடன் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால், இதற்கு முன்பு பார்த்திராத வகையில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். மேலும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஈரானையும் எச்சரித்துள்ளார். இந்த தாக்குதலை போர் குற்றம் எனக் குறிப்பிட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.