இன்று முதல் யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கான வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்கிறது. இதற்கு முன் 1 லட்சம் ரூபாய் வரை மட்டும் பரிவர்த்தனை செய்ய முடிந்த நிலையில் இனி கல்வி, மருத்துவம் மற்றும் வரி செலுத்துபவர்கள் மட்டும் யுபிஐ பரிவர்த்தனையின் மூலம் ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப முடியும்.