இன்ஸ்டாகிராமில் பல்வேறு ஆப்ஷன்கள் கொண்ட புதிய அப்டேட் இளம்தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது. புதிய அப்டேட் மூலம் இனி பயனர்கள் தங்களது தனிப்பட்ட மெசேஜ் பிரிவில் புனைப்பெயர்களை வைத்துக்கொள்ள முடியும். இதனை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரியும் வகையில் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர லைவ் லொகேஷன் பகிரும் வசதியும் புதிய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு வகையிலான புத்தம் புது ஸ்டிக்கர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.