நடிகர் விஜய் சேதுபதியின் 52-வது படத்திற்கு 'தலைவன் தலைவி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதில் படத்திற்கு 'தலைவன் தலைவி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டரை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.