ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் இந்த மாதம் தொடக்கம் முதலே பனிப்புயல் கடுமையாக வீசி வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகள், ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் பனிப்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.