இனக்கலவரம் நீடிப்பதை அடுத்து மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இனக்கலவரம் பரவுவதை தடுக்கவும், வதந்திகள் பரவுவதை தடுக்கவும் மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இனக்கலவரத்தில் தற்போது டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவதால், டிரோன் எதிர்ப்பு தளவாடங்களை போலீசார் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் மணிப்பூர் இனக்கலவரத்திற்கு எந்த முடிவும் ஏற்படவில்லை என்பதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.