ராஜஸ்தான் மாநிலம் பிகானரில்யுள்ள விமானப்படை நிலையத்தில் ராணுவ வீரர்களுடன் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடிய அமைச்சர், பின்னர் தன் கைகளாலே வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டார்.