ஐபிஎல்-ல் கடந்த 2021ஆம் ஆண்டு நீக்கப்பட்ட அன்கேப்ட் வீரர் விதிமுறை தோனிக்காக மட்டுமே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தோனி போன்ற வீரருக்காக அடிப்படை விதிமுறைகளிலேயே இப்படி மாற்றம் செய்வதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விதிமுறை சரியான வழியில் மாற்றப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.