காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹாவை சந்தித்தார். காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட்ட தேசிய மாநாடு கட்சி 42 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்நிலையில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் அப்துல்லா துணை நிலை ஆளுநரை சந்தித்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்கினார்.