ரஷ்யாவுக்கு எதிரான போர் 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென அறிவித்துள்ளார். தலைநகர் கீவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளதாக கூறினார்.