ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர்கள் டிரம்ப் மற்றும் புதினுக்கு எதிராக கண்டன கோஷமிட்ட அவர்கள், உக்ரைன் அதிபர் இல்லாமல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நடத்தக் கூடாது என வலியுறுத்தினர்.