இங்கிலாந்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது அசைவ உணவுடன் மதுபானம் வழங்கியது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது. பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மதுவிருந்து அளிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இனி இதுபோன்ற தவறுகள் நிகழாது என பிரதமர் அலுவலகம் உறுதியளித்தது.