சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்த அவர், கூட்ட அரங்கம், பேரிடர் தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது, மழை பெய்யும் இடம், மழை பொழிவு எவ்வளவு, தகவல் தருபவர் யார் என்பது குறித்த விவரங்களை பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., துணை முதலமைச்சர் உதயநிதியிடம் எடுத்துக் கூறினார். தொடர்ந்து, பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.